வேம்பு மரம் வீட்டுக்கருகில் வேண்டுமா?

Update: 2024-11-23 07:20 GMT
NEEM

இக்காலத்து அலங்காரத்தாவரங்கள் வீட்டு முற்றத்திலும், வீட்டுக்குள்ளும், மொட்டை மாடியிலும் நட்டுவளர்த்தி பராமரித்து வரும் அவசர வாழ்க்கையில் வீட்டு முற்றத்தில் வேம்பு மரம் நின்றாலும் அதை வெட்டி விடும் காட்சிகளையே நாம் காண்கின்றோம்.

முற்காலத்திலோ, வீட்டு முற்றத்தில் அல்லது கொல்லைப்புறத்தில் வேம்பு நட்டு பராமரிப்பதில் மிக ஆர்வம் கொண்டிருந்தனர். அம்மரத்தில் தெய்வீக சந்நிதி இருப்பதாக நம்பியிருந்தனர். ஆனால் வேம்பின் நற்குணங்களை அயல் நாட்டினர் கண்டுபிடித்து நமக்கு எடுத்துரைத்தனர்.

வேப்பின் மருத்துவ குணங்களைக் கண்டறிந்த அயல் நாட்டினர் அதன் தனி உரிமையையும் வைத்துக் கொண்டனர் என்பது நாம் அறிந்துள்ளோம். அபூர்வ மருந்துக்களின் பட்டியலில் இது இடம் பெறுகின்றது. வீட்டுக்கருகாமையில் நிற்கும் வேம்பின் இலைகளைத் தழுவி வரும் காற்றில் நோயணுக்களை அழிக்கும் சக்தி உண்டென்று நாம் கண்டறிந்துள்ளோம்.

விளையாட்டம்மை போன்ற நோய்களுக்கு வேப்பிலையால் உடல் முழுதும் தடவுகின்றோம். வேப்பிலை சேர்த்துக் காய்ச்சிய எண்ணை சொறிசிரங்கு போன்ற சரும நோய்களுக்கு மிக உத்தமம் என்று ஆயுர் வேதம் கூறுகின்றது.


Tags:    

Similar News