கரும்பு பூத்தால் உரிமையாளர் இறந்து போவதுண்டா?
கரும்பு பூத்தால் அதை உடையவர் மரணமடைவார் என்றொரு நம்பிக்கை இன்றும் பல இடங்களிலும் நிலை நிற்கின்றது. கரும்பு பூத்தால் உரிமையாளருக்கு தீங்கு என்றும் சில இடங்களில் நம்புகின்றனர்.
எப்படியானாலும் விசுவாசம் உண்மை தான். கரும்பு பூத்தால் உர்மையாளருக்குப் பெரும் தீங்குதான் என்பது நவீன சாஸ்திரமும் ஒப்புக் கொள்கின்றது.
நாம் உணவுக்குப் பயன்படுத்துவது கரும்பின் தண்டு. அதன் இலையை கால்நடை உணவாகப் பயன்படுத்துகின்றோம். கரும்பு மலர்வதற்கு மிக அதிகம் சக்தி தேவைப்படுகின்றது. அப்படி பூக்கத் தொடங்கினால் அதன் தண்டின் வளர்ச்சி நின்றுவிடும். அதன் இலைகளும் கரிந்துவிடும் பூக்காதிருந்தால் தண்டு அதிக வளர்ச்சியடையும் விளைவும் கூடுதல் கிடைக்கும்.
ஆனால் கரும்பு பூவணிவது தடைபடுகின்றது. கரும்பு மலரும் நேரத்தை சுயமாக கட்டுபடுத்துவது சூரியனின் திசையை ஆதாரமாக்கியாகும். ஏதாவது ஒருதனிப்பட்ட இரவின் நீடிப்பைக் கணக்கிலெடுத்தே அதற்குள்ள நேரம் திட்டமிடப்படுகின்றது. கரும்பின் இமை, வளரும் இடம் என்பவைக்கேற்ப இந்த நேரம் மாறும் என்றாலும் வேறு செடிகளில் இதுதான் நேரம். மனிதரிலும் கண்டு வருகின்ற ஜீவகடிகாரம் செடிகளின் இத்தகைய நிலையை கட்டுப் படுத்துகின்றது.
இந்த செயல்பாடு நடக்காதிருக்க வேண்டுமானால் செடிகளை நேரம் பார்க்க அனுமதிக்காதிருக்க வேண்டும். கரும்பின் வாழ்க்கையின் சில குறிப்பிட்ட இரவுகளை, சக்தியான செயற்கை ஒளி உபயோகித்து, அறிந்து கொள்ளாமல் செய்தால் பூக்கள் உருவாதலைத் தடைசெய்யலாம் இரவு மற்றும் பகலின் நீடிப்பை அறிந்து கொள்ள கரும்பை உதவுவது இதன் கண்களாகச் செயல்படும் மேல் பாகத்துச் சில இலைகளாம் இவற்றை அகற்றவும் வேண்டும். அப்போது சாதாரணமாக வளர்ந்து, தண்டு பருமனடையும் இக்காலத்தில் சில வேதிப் பொருட்களின் உதவியால் மலர்வதை தடை செய்கின்றனர் என்றாலும் அது உடல் நலத்துக்குத் தீங்குவிளைவிக்கலாம் இப்படிப் பார்க்கும் போது கரும்பு பூத்தால் விளைச்சல் குறையும் என்பது திட்டம் அப்படியானால் அதன் உரிமையாளருடைய உடலுக்கும் உயிருக்கும் தீங்கு வருமல்லவா?