சர்வதேச உலக யோக தினம் - யோக செய்வதன் ஆன்மிக நன்மைகள் !!!

Update: 2024-06-21 10:50 GMT

யோகா தினம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

யோக , தியானம் என்பது துறைவிகள் சன்னிநியாசிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த காலகட்டத்தில் நிலை மாறி, இவற்றின் நன்மைகளை புரிந்து கொண்டு பலரும் இவற்றை பயிற்சி செய்ய துவங்கி விட்டனர். உடல் மற்றும் மனதிற்கு ஆரோக்கியத்தை தருவதால் இவற்றை பயிற்சி செய்யும் படி தற்போது அறிவியலாளர்கள், மருத்துவர்கள் என பலரும் பரிந்துரைக்க துவங்கி விட்டனர்.

2014ம் ஆண்டு துவங்கி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிக பாரம்பரியமான ஆரோக்கிய பயிற்சி முறைகளில் ஒன்று யோகா. இது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் அளிப்பதால் உலக அளவில் இந்த முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

யோகாவின் மிக முக்கியமான பகுதி தியானம். நம்மை சுற்றி இருக்கும் புற உலகிற்கு அப்பால் நம்முடைய ஆழ்மனதில் அனைவருக்குள்ளும் ஒரு அமைதி, ஆனந்தம் நிறைந்திருக்கிறது. இதை வெளிக் கொண்டு வருவதே தியானத்தின் நோக்கமாகும். இந்த அமைதி மனதை தூய்மைப்படுத்தி, வாழ்க்கையை எளிமையானதாக்குகிறது. இதை தாண்டி ஆன்மிக ரீதியாக தியானம் நமக்கு பல விதமான நன்மைகளை தருகிறது.

சமநிலை : வழக்கமாக யோகா மற்றும் தியானத்தை பயிற்சி செய்ய துவங்கினால் அது மனதையும், உடலையும் சமநிலைப்படுத்துகிறது. இதனால் அறிவு, புரிதல், புத்தி கூர்மை ஆகியவை மேம்படுகிறது. தியானத்தின் மூலமாக சுய விழிப்புணர்வு நிலை ஏற்படுகிறது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உங்களை சமநிலை இழக்கச் செய்யாது. நரம்பு மண்டலம் வலுவடைந்து உயிர்ச்சக்தி அதிகரிக்கச் செய்கிறது. இதனால் வாழ்க்கையின் தரம் உயர உதவுகிறது.

​மனஅமைதி : நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளால் நம்முடைய எண்ணங்கள் பாதிக்கப்படுகின்றன. இது நம்முடைய மகிழ்ச்சி மற்றும் அமைதியையும் பாதிக்கிறது. ஆனால் தியானத்தின் மூலம் மனதில் அமைதியை கொண்டு, எந்த நிலையிலும் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்குள் ஏற்படும் இந்த அதிர்வலைகள் உங்களை சுற்றியும் பரவ துவங்கி, சுற்றி உள்ளவர்களுக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உற்சாகம் : தொடர்ந்து தியானம் மற்றும் யோகா செய்யும் போது எந்த சூழ்நிலையாலும் உங்களுடைய மகிழ்ச்சி, உற்சாகம் குறைய முடியாத நிலை ஏற்படுகிறது. தியானம் செய்யும் போது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் ஓய்வெடுகிறது. இதனால் அவைகள் கூடுதல் சுறுசுறுப்புடன் இயங்க துவங்குகின்றன. அதோடு தீய எண்ணங்கள், மோசமான உணர்வுகள் அகற்றப்படுகிறது. எந்த நிலையிலும் உற்சாகம் குறையாதவராக நம்மால் இருக்க முடியும்.

ஆன்ம விழிப்புணர்வு : தியானத்தின் மூலம் ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுகிறது. இதனால் ஆசைகள், பற்றுகளில் இருந்து மனம் தானாக விடுபடுகிறது. இதனால் மறுபிறவியை கூட உணர முடியும் என சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் தியானத்தை பயிற்சி செய்வதால் நம்முடைய மறுபிறவியின் மகிழ்ச்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் நமக்குள் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நம்மிடம் இருந்து அகற்றுகிறது.

மனநிறைவு : தியானத்தினால் மனநிறைவு ஏற்படுகிறது. விழிப்புணர்வு நிலையால் மனதில் பலவிதமாவன மாற்றங்கள் ஏற்படுகிறது. மனம் ஆசைகளில் இருந்து விடுபடுவதால், வாழ்க்கை பற்றிய பலவிதமான புரிதல்கள் ஏற்படுகிறது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே என்ற பக்குவ நிலை, புரிதல் ஏற்படுகிறது.

​தனிப்பட்ட மாற்றம் : தியானத்தின் மூலம் ஒருவருக்குள் ஏற்படும் மாற்றம் உலகத்தை பற்றியும், மற்றவர்களை பற்றியும் மட்டுமின்றி, தன்னை தானே புரிந்து கொள்ளும் ஆற்றல் ஏற்படுகிறது. ஆழமான தியான நிலைக்கு செல்லும் போது நீங்கள் வேறு நிலைக்கு மாற்றம் அடைவதை உங்களால் உணர முடியும். பிரபஞ்ச சக்தியுடன் உங்களை இணைத்துக் கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.

​மிகுதியான நிலை : மனதில் நிறைவு என்ற உணர்வு ஏற்படும் போது குறைகள் காணாமல் போய் விடுகின்றன. நினைவுகள் நிஜமாகும் நிகழ்வு தியானத்தின் மூலம் தானாக நடக்கிறது. எண்ணங்கள் வலிமை பெற்று அவைகள் செயல்களாக மாறும் போதும் எதிலும் மிகுதியாக கிடைக்கும் நிலை உருவாகும்.

Tags:    

Similar News