திலகமிடுவது மிக அவசியமா?
திலகமிடுவது ஆத்மிக முன்னேற்றத்தின் சின்னம் என்பது பொதுக் கருத்து.
பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிடப்பயன்படுத்துகின்றனர்.
இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமி டுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இது, மத விசுவாசத்துடன் சம்பந்தப்பட்டதல்லாமலே ஒரு நபரில் நிச்சயமான செல்வாக்கு செலுத்தவல்லது.
மனித உடலின் ஐந்தாவது திறன்மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டுவைப்பது வழக்கம் இந்த மையத்தில் பார்வையைப் பதிய வைத்தே தன்வயப்படுத்தி மயங்கவைப்பது. இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில் அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்தி விடுகின்றது.
பிரம்ம முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும் மாலைப் பொழுதில் திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும் நோய் நிவாரணத்துக்கும் உத்தமம் என்று சூரிய ஒளியையும் மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
சந்தனமும் விபூதியும் அணிய சில தனிப்பட்ட விதிமுறைகளும் பாரத கலாச்சாரம் நம்மை கற்பிக்கின்றது.
நெற்றியில் - ஓம் கேசவாயநம
கழுத்தில் - ஓம் புருஷோத்தமாய நம
இதயத்தில் - ஓம் வைகுண்டாய நம
நாபியில் - ஓம் நாராயண நம
திருநீரை காலையில் நீரில் குழைத்தும் நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில் உலர்ந்த திருநீரே அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.