துளசி தீர்த்தம் இவ்வளவு நன்மையா!
கோயிலில் சென்று தரிசனம் நடத்தி தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கம் இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந் ததனால் அதைப் புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
இதன் புனிதத் தன்மையையும் தூய்மையையும் நம்பாதவர்கள் இதன் பயன்களை அங்கீகரிப்பதில்லை.
இந்து மதத்தவர்கள் வீடுகளில் இறை சமமாகக் கருதியே துளசிச் செடியை நட்டிருந்தும், துளசிமாடம் கட்டி விளக்கேற்றிப் பராமரித்திருந்ததும் கோயிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உண்டென்று நாம் கண்டறிந்துள்ளோம்.
துளசி தீர்த்ததிற்காக கோயிலுக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார் செய்யலாம்.
க்லஸ்டர்ட்வாட்டர் என்ற பெயரில் மேல்நாட்டவர் கண்டு பிடித்திருக்கும் பரிசுத்த நீருக்கு நிகராக நிற்பதே துளசி தீர்த்தம். நீர் அசுத்தமாகுதல் குறித்து ஆராய்ச்சிசெய்த அமெரிக்க விஞ்ஞானிகளே க்லஸ்டர்ட்வாட்டர் கண்டு பிடித்தனர். நவீன முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட இந்த நீரில் இரண்டு துளிகள் ஒரு டம்ளர் சாதாரண நீரில் சேர்த்து குடிக்கின்றனர்.
ஆனால் விக்கிரகத்தில் அபிஷேகம் செய்து கிடைக்கும் துளசிதீர்த்தம் கலஸ்டர்ட் வாட்டருக்கு நிகரான பரிசுத்தமுடையது என்று இந்திய விஞ்ஞானியும் கேரளத்தைச் சார்ந்த வருமான டாக்டர்.டி.பி. சசிகுமார் சோதனைகளால் நிரூபித்திருக்கின்றார்.
கோயிலில் செல்லாமல் வீட்டிலேயே துளசி தீர்த்தம் தய்யாறிக்கும் எளிய முறையை பழைய மக்கள் கைக் கொண்டிருந்தனர். ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் நாலோ ஐந்தோ துளசி இலைகள் பறித்து இட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம்.