காலபைரவர் வழிபாடு முறைகள் - காலபைரவர் பிரசாதத்தை எடுத்து செல்லகூடாது ?? என் தெரிஞ்சிகோங்க !!
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர்கோவிலில், கார்த்திகை மாதம் என்பதால் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா தேவர் மற்றும் கால பைரவர் என 2 தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு பிரமாண்டமாக நடைபெறும்.
கார்த்திகை மாதம் என்பதால் மகா தேவருக்கும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.ஒரே நேரத்தில் இரண்டு தெய்வங்களுக்கும் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பூஜைகள் நடைபெறும்.
இதில் கலந்துகொண்டால் கிடைக்கும் நன்மைகள் :
மற்ற மாதங்களில் இரவு தான் தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு நடைபெறும். கார்த்திகை மாதம் என்பதால் காலையிலேயே காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். மற்ற மாதங்களில் காலபைரவருக்கு மட்டும் பூஜை நடைபெறும், கார்த்திகை மாதம் மகாதேவருக்கும் பூஜை நடைபெற்றது சிறப்பு. குறிப்பாக காசியில் தான் கால பைரவருக்கு மிகவும் விசேஷமாக இருக்கும்.
கேரளாவில் காலபைரவற்க்கு சிறப்பு தலம் உள்ளது. இங்கு இம்மாதம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். அதாவது ஆயிரம் இலைகளும் கோயிலுக்குள் போடப்பட்டிருக்கும். ஆனால் 999 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுப்பப்படுவார்கள். அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ஆயிரம் இலைகளும் எச்சி இலைகளை எடுப்பதற்கு ஏராளமானோர் குவிவார்கள். ஏனென்றால் ஏதாவது ஒரு உருவத்தில் கடவுள் சிவபெருமான் வந்து சாப்பிட்டதாக நம்பப்படுகிறது. இந்த சிறப்பு தளம் கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ளது. கார்த்திகை மாதம் இங்கு திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கேரளாவில் இதற்கு வைக்கம் அஷ்டமி என்ற பெயர் உள்ளது. உலகம் முழுவதும் எங்கெல்லாம் காலபைரவர் சிலை உள்ளதோ அங்கெல்லாம் தேய்பிறை அஷ்டமி போது பூஜை நடைபெறும். காலபைரவர் சிவனின் ஒரு அம்சம். காசியில் காவல் தெய்வமாக உள்ளார். அனைத்து கோவில்களிலும் அவர் காவல் தெய்வமாக இருக்கிறார். அதாவது கோவிலில் உள்ள எந்த ஒரு பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக அவர் பார்த்துக் கொள்கிறார். அந்த காலத்தில் கோயிலை பூட்டிவிட்டு காலபைரவர் சன்னதியில் தான் சாவியை வைத்து செல்வார்கள். ஏனென்றால் காலையில் வந்து பார்க்கும் பொழுது அந்த சாவி அந்த இடத்திலேயே இருக்கும்.
காலபைரவருக்கு வாசனை பூக்கள் பிடிக்காது. தயிர் சாதம், சக்கரை, பொங்கல், வடை மாலை கொடுத்து அவரை வழிபடலாம். காலபைரவர் பிரசாதத்தை வீட்டிற்கு சென்று போகக்கூடாது. அங்கேயே வைத்து சாப்பிட்டு விட வேண்டும். ஏனென்றால் அவர் காவல் தெய்வம் என்பதால் பொருட்களை எடுத்துச் சென்றால் ஆகாது. குறிப்பாக பில்லி சூனியம் இருக்கிறது என நம்புவர்கள் காலபைரவரை வழிபட்டால் அனைத்தும் விலகிவிடும். வாழ்வில் மேன்மை ஏற்படும்.