கேதார கெளரி விரதம் மற்றும் பலன்கள் !!

Update: 2024-10-22 07:40 GMT

ஆன்மிகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கெளரி விரதம் குறிப்பாக தென்னிந்தியாவில் மிக விசேஷமாக இந்த விரதம் கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. சிவ பெருமானின் அருளை வேண்டி கடைபிடிக்கப்படும் விரதங்களில் முக்கியமான விரதம் என்பதால் இதனை கேதாராஸ்வரர் விரதம் என்றும் கூறுவர். இது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, வேண்டும் வரங்கள் அனைத்தையும் வழங்கும் அற்புதமான விரதமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக திருமணமான பெண்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால் மிகவும் சக்தி வாய்ந்தது.

ஐப்பசி மாத அஷ்டமியில் துவங்கி 21 நாட்கள் கேதார கெளரி விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஐப்பசி மாத அமாவாசையில், அதாவது தீபாவளி திருநாளில் இந்த விரதத்தை நிறைவு செய்பவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் அம்பிகையும், ஈசனும் நிறைவேற்றி வைப்பார்கள் என்பது ஐதீகம். குறிப்பாக திருமணம் வரம், கணவன்-மனைவி ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் உள்ளிட்டவற்றிற்காக இந்த விரதம் இருக்கப்படுவது வழக்கம். இந்த விரதத்தை உண்மையான பக்தியுடன், உரிய முறைகளை பின்பற்றி கடைபிடித்தால் அவர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

Tags:    

Similar News