பிறந்த தினம் .. சிறந்த பலனும்.. பற்றி தெரிந்துகொள்வோம் !
ஒருவர் தன் வாழ்நாளில் எவ்வளவு தான-தர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு செய்தால், கலியுகத்திலேயே இறைவனின் அருளைப் பெறலாம் என்பது சான்றோர் வாக்கு. அதே நேரம் ஒருவர் தன்னுடைய பிறந்த தினத்தில் திருமலை வேங்கடவனை வழிபட்டாலும் சிறப்பான பலன்களை அடையலாம்.
திங்கட்கிழமை - பிறந்தவர்கள், நவக்கிரகங்களில் சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களாவர். இவர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையான காலை 6 மணியளவில் திருமலையானுக்கு நடைபெறும் விஷேச பூஜையில் கலந்துகொள்வதால் மனம் மகிழும் வாழ்க்கை அமையும்.
செவ்வாய்க்கிழமை - பிறந்தவர்கள், நவக்கிரகங்களில் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களாவர். அவர்கள் ஏழுமலையானை, செவ்வாய்க்கிழமையில் வரும் செவ்வாய் ஓரையில் வணங்குவது நன் மைகளைத் தரும்.
புதன்கிழமை - பிறந்தவர்கள், கல்வியைத் தரும் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்களாவர். அவர்கள், புதன் கிழமை அன்று புதன் ஓரையில் ஏழுமலையானை வணங்கினால் புண்ணியம் பெருகும்.
வியாழக்கிழமை - பிறந்தவர்கள், நவக்கிரகங்களின் குருவான, வியாழனின் ஆதிக்கம் பெற்றவர்கள். அவர்கள் வியாழக்கிழமை அன்று, குரு ஓரையில் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
வெள்ளிக்கிழமை - பிறந்தவர்கள், அசுர குருவான சுக்ரனின் ஆதிக்கம் பெற்றவர்களாவர். அவர்கள் வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் ஏழு மலையானை வழிபட்டால் பாக்கியம் கிடைக்கும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை - பிறந்தவர்கள், தங்களின் பிறந்த கிழமையில் திருப்பதி ஏழுமலை யானுக்கு அதிகாலை நடக்கும் சகஸ்ர நாம அர்ச்ச னையிலும், அதன் பிறகு நடக்கும் சாற்று முறை வைபவத்திலும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியான வாழ்வமையும்.