தொட்டிபட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
தொட்டிபட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் தொட்டிபட்டியில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீநிருதி கணபதி, அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன், அருள்மிகு அரசமர ஸ்ரீ மகா கணபதி நவகிரக தெய்வங்களுக்கு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு காவேரி தீர்த்தம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு பஞ்சகல்யம் கணபதியாக்கம் நவகிரக யாகம் லட்சுமி யாகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டு மாலை 4 மணிக்கு முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு மங்கல இசை விநாயகர் வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இரவு கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது..
இதை அடுத்து வருகிற 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு புண்ணியாகம் பஞ்சகயம் இரண்டாம் கால யாக பூஜை ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்று அதனை தொடர்ந்து காலை ஒன்பதரை மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகர் விமான மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், அரசமர ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ நவகிரக மூலஸ்தான மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும், மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அன்னதானம் வழங்கப்படுகிறது