அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள் இருக்கும் முக்கிய கோவில்கள்

அழகன் முருகனின் அபூர்வ வடிவங்கள் இருக்கும் முக்கிய கோவில்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

Update: 2024-06-28 09:10 GMT

கோயில்கள்

முருகனின் அபூர்வ வடிவங்கள் இருக்கும் கோவில்கள் பற்றிப் பார்க்கலாம்! பல நூற்றாண்டு பழமையான சரித்திர பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு மலை மீதிருக்கும் முருகனின் கையில் இருப்பது கல்லாலான வேலாகும்.

இது முருகப்பெருமானின் தலைக்கு மேல் உள்ள கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கும் அற்புதத்தை காணலாம்.

இது முருகனில் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே இதை குறைக்கவோ, உடைக்கவோ முடியாதப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சேலம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான இடத்தில் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கே முருகப்பெருமானும்,

அன்னை பார்வதியும் எதிரெதிர் சன்னதியில் இருப்பதை காணலாம். அம்பாள் உயிராகவும், முருகன் அறிவாகவும் இருப்பதாக ஐதீகம். இங்கே மற்றொரு அதிசயமாக முருகனை சுற்றி மனைவியரோடு சேர்ந்த நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். எட்டுக்குடி முருகன் கோவில் சிவப்பெருமானின் அடியார்களுக்கும், முருகப்பெருமானின் அடியார்களுக்கும் மனதிற்கு பிடித்த ஸ்தலமாகும்.

கந்தப்புராணத்தில் கூறியிருப்பதுபோல இங்கு முருகப்பெருமான் சூரபத்ரனை அழிக்கும் பொருட்டு இந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்து அம்பராத்தூணில் இருந்து அம்பை எடுக்கும் வீரசௌந்தர்யம் உடையவராய் வீற்றிருக்கும் வேலாயுத கடவுள்தான் இங்கு மூலவராக உள்ளார். இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்த வண்ணம் பக்தர்கள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் திருபோரூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கந்தசாமி கோவில்.

இங்கு முருகர் சுயம்புவாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்ரமணியன் எந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனுக்கு பூஜை நடந்த பின்பு இந்த எந்திரத்துக்கு பூஜை நடக்கும்.

வாய்மீது கை வைத்து அமர்ந்திருக்கும் சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தி மயில் மீது காலை வைத்தப்படி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கே உள்ளன.

குண்டலிபுரத்தில் உள்ள ரேணுகாதேவி ஆலயத்தின் வடக்குப்புறம் தோகை விரிக்காத மயிலின் அருகில் முருகப்பெருமான் நின்றப்படி காட்சித்தருவது வியப்பானது. இங்கே போகர் பிரதிஷ்டை செய்த வீரவேலுக்குதான் அபிஷேக ஆராதனையெல்லாம் நடக்கிறது. ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள பச்சைமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இங்கே 41 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார்1600 அடி உயரம் கொண்ட மலையின் மீது இந்த சிலை அமைக்கப் பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை இது என்று கூறப்படுகிறது. திருச்சிக்கு அருகில் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செட்டிக்குளம் முருகன் கோவில். இங்கே முருகன் ஆண்டியாக கரும்பை வில்லாக ஏந்தி நிற்கும் முருகனை வேறு எங்கும் காண முடியாது. கழுகுமலையில் இருக்கும் முருகன் கோவில் மிகவும் பழமையானது.

இங்கு இருக்கும் முருகப்பெருமான் இடதுப்புறமாக நின்ற நிலையில் இருக்கும் மயில் வாகனத்தில் ஆறு கைகளுடன் மேற்குமுகமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பது ஆபூர்வமாக கருதப்படுகிறது.

கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவிலில் உள்ள முருகன் அதிசயமாக ஆறுமுகத்துடன், ஆறு கரத்துடனும் காட்சியளிக்கிறார்.

Tags:    

Similar News