மகர விளக்கு பூஜை : சரண கோஷங்கள் முழங்க சபரிமலையில் நடை திறப்பு
சபரிமலையில் மகர விளக்கு பூஜையையொட்டி பக்தர்களின் சரண கோஷங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது.;
Update: 2023-12-31 06:51 GMT
நடை திறப்பு
பிரசித்தி பெற்ற சபரிமலையில் 41 நாட்கள் நீண்ட "மண்டல கால மகோற்சவம்" கடந்த 27ம் தேதி நிறைவுற்ற நிலையில், "மகர விளக்கு பூஜை "க்காக சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல் சாந்தி முரளி நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் இல்லை என்றாலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். டிசம்பர் 31ம் தேதியான நாளை முதல், அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணி வரையிலும் மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். வழக்கமான சிறப்பு பூஜைகளும் அபிஷேகம், ஆராதனைகளும் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.