பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக புதிய மின் இழுவை ரெயில்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய 3 மின் இழுவை ரெயில் இயக்கம்

Update: 2024-01-24 17:53 GMT

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய 3 மின் இழுவை ரெயில் இயக்கம்

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சிரமமின்றி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக 3 மின் இழுவை ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த மின் இழுவை ரெயிலின் பயணம் நேரம் 8 நிமிடம் ஆகும். இந்த மின் இழுவை ரெயிலில் பயணிக்க சிறப்புக் கட்டணம் ரூ.25ம், ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. இதில் ஒருமுறைக்கு தற்போது 32 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் பக்தர்கள் பயணிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதிய மின் இழுவை ரெயிலில் நன்கொடையாளர் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் டி.வி, குளிர்சாதன வசதிகளுடன் 72 பேர் பயணிக்கக் கூடிய வகையிலான நவீனமயமாக்கப்பட்ட மின் இழுவை ரெயில் பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
Tags:    

Similar News