அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பரிவேட்டை விழா நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-26 03:42 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ் வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங் குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவ அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 10-ம் நாள் பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. இதில் உற்சவ அம்மனுக்கு ஸ்ரீவிஜய சாமுண்டீஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.பின்பு பம்பை, மேள தாளம் முழங்க மந்தைவெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகிஷாசூரனை அம்பெய்தி கொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு அம்மன் ஊர்வலமாக சென்று இரவு 10 மணிக்கு கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம். அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராம லிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.