நவல்பட்டு ஞான விநாயகர் ஆலயத்தில் தர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்சி நவல்பட்டு அருகே உள்ள போலீஸ்காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் தர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.;
By : King 24x7 Website
Update: 2023-12-25 17:06 GMT
திருச்சி நவல்பட்டு அருகே உள்ள போலீஸ்காலனி ஞான விநாயகர் ஆலயத்தில் தர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே உள்ள போலீஸ் காலனி ஞான விநாயகர் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள தர்ம சாஸ்தாவுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. தொடர்ந்து தர்ம சாஸ்தாவுக்கு திருவிளக்கு பூஜை சிறப்பு பஜனைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக இன்று தர்மசாஸ்தாவுக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தர்ம சாஸ்தா எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தர்ம சாஸ்தாவை வணங்கினர்.