குளிகை நேரத்தில் அசுப காரியங்கள் நடத்த கூடாது !!

Update: 2024-10-09 10:40 GMT

குளிகை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் தெரிந்தது. சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான். அதனால் தான் குளிகை என்ற பெயர் வந்தது. இந்த நேரத்தில் நீங்கள் எதை செய்தாலும் அது திரும்பத் திரும்ப பன்மடங்காக வளரும் என்பது ஐதீகமாக உள்ளது. எந்த ஒரு செயல் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த செயலை குளிகை நேரத்தில் நீங்கள் துவங்கினால் நினைத்தது வெற்றியடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த நேரத்தில் செய்யப்படும் காரியங்கள் திரும்பத் திரும்ப நடக்கும் என்பதால் நல்ல காரியங்கள் செய்ய உபயோகப்படுத்திக் கொள்ளலாம் .உதாரணமாக நகை வாங்குதல் கடன் அடைத்தல் போன்றவை. அசுப காரியங்கள் திரும்ப நடக்க வேண்டுமென்று யாரும் விரும்பமாட்டார்கள். எனவே இந்த நேரத்தில் அசுபகாரியங்களை தவிர்க்க வேண்டும். சுப காரியங்களிலும் நுணுக்கமாக ஒன்றை பார்க்க வேண்டும் உதாரணமாக இந்த நேரத்தில் வீடு வாங்கலாம். ஆனால் வாடகை வீட்டில் பால் காய்ச்சக் கூடாது. அப்படி செய்தால் திரும்பத் திரும்ப வீடு மாற வேண்டியதாக இருக்கும். குளிகையில் திருமணம் செய்தால் அந்த மணவாழ்க்கை அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. விவாகரத்து நேரும். மீண்டும் திருமணம் செய்யும் நிலை வரலாம். இதனால் அந்த நேரத்தில் திருமணம் தவிர்க்கப்படுகின்றன. இந்த நேரத்தில் தங்க நகையை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, இறந்தவர்களின் உடலை எடுப்பது போன்ற காரியங்களை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த விஷயங்கள் அனைத்தும் திரும்ப திரும்ப நடைபெறும் என்று நம்பப்படுகிறது. இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும்.

Tags:    

Similar News