குலதெய்வத்தின் சாபம் நிவர்த்தி செய்வது - எப்படி?
By : King 24x7 Angel
Update: 2024-08-08 00:30 GMT
குல தெய்வத்தை எவர் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோவிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.
இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாப நிவர்த்தி செய்வது அவசியம், நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கி" வந்தார்களோ அதே முறைப்படி நாம் வணங்க வேண்டும்.
நமது தவறுக்காக குல தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டால் சாபம் தீரும். குலதெய்வங்கள் கர்மவினைகளை தீர்க்க வல்லவை.
கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் கிடைக்காது.