கோயிலின் முதுகெலும்பாக திகழும் கொடிமரம் !
ஒரு கோயிலுக்குச் செல்லும் போது பக்தரை முதலாவது வரவேற்பது அங்குள்ள கொடிமரம். பெரிய கட்டடங்களின் இடிதாங்கி அளிக்கும் பயனையே கொடிமரமும் அளிக்கின்றது. கோயில் கொடி மரத்தைவிட உயரமாகக் கட்டடங்கள் கட்டினால் தீபிடிக்கும் என்ற நம்பிக்கையும் இதன் அடிப்படையில் உருவானது. இதனால் கோயிலான உடலில் கொடிமரமே முதுகெலும்பு எனக் கூறுகின்றனர். கொடி மரத்தின் அடிபாகம் கோயில் என்ற உடலின் அரைக்கட்டிலாகும். இங்கிருந்து அம்பலத்தின் கீழ்பாகம் வழியாக ஸ்ரீ கோயிலின் நடுவில் தேவவிக்கிரகம்வரை செல்ல வேண்டியது இது. ஆனால் பக்தர்கள் பார்வைக்கு கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் இது நிமிர்த்தி நிறுத்தப்பட்டிருக்கின்றது.இது போன்ற கொடி மரத்தின் மேல் பாகத்தில் அந்தந்த கோயிலின் தேவனின் வாகனம் வைத்திருக்கப்படும். கோயிலின் கொடியேற்றத்திற்குப் பின்னாலும் ஓர் இரகசியமுண்டு. குண்டலிநீ சக்தியின் சின்னமான கொடிக்கூறையை பிராணயாமம் வாயிலாக ஜீவசக்தி மண்டலத்துக்கு உயர்த்துவதின் அடையாளமாகும் கொடியேற்றம்.