திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் எற்றபடவுள்ளது.

Update: 2024-12-13 11:07 GMT
திருவண்ணாமலை 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்வாக, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையில், இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கனமழை பாதிப்பால், நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்காக குவிந்துள்ளார்கள்.

மேலும், இன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் எற்றபடவுள்ளது. 

Tags:    

Similar News