திருப்பாவை திருவெம்பாவை பாடல் பயிற்சி

திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் ஜன. 3-ந் தேதி தொடக்கம்

Update: 2023-12-31 04:31 GMT

திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பயிற்சி வகுப்புகள் ஜன. 3-ந் தேதி தொடக்கம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடல்கள் பாட பயிற்சி வழங்கப்பட உள்ளது.  திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் வைத்து வருகிற ஜனவரி 3-ந் தேதி(புதன்கிழமை) முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News