நாகதோஷம் எதனால் ஏற்படுகிறது ! அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ??

Update: 2024-10-28 07:20 GMT

நாகதோஷம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பரம்பரை பரம்பரையாக வரும் பிரச்னைகளை நாகதோஷத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் நாகதோஷம் என்பது ராகு – கேதுக்களைக் கொண்டு அறியப்படுகிறது. இந்த ராகுவை பிதாமஹகாரகன் என்றும் கேதுவை மாதாமஹகாரகன் என்றும் சொல்வார்கள். இதற்கு அர்த்தம் தந்தைவழி பரம்பரையில் இருந்து வரும் நன்மை தீமைகளை ராகுவும், தாய் வழி பரம்பரையில் இருந்து வரும் நன்மை தீமைகளை கேதுவும் கடத்துகின்றன. இந்த ராகு –கேது தோஷம் என்பது தீமை மட்டும்தான் நடக்கும் அப்படி சொல்லவும் முடியாது, நன்மையும் நடக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ராகு-கேதுவின் அமர்வுநிலையைக் கொண்டு அது தோஷமாக இருக்கிறதா அல்லது யோகமாக இருக்கிறதா என்பதை தேர்ந்த ஜோதிடரின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். காரணமின்றி நாகங்களைக் கொன்று இருந்தாலும், அவைகளின் இருப்பிடமான புற்றினை இடித்தோ அல்லது அழித்திருந்தாலும், அதனால் அந்த பரம்பரைக்கே கடுமையான நாகதோஷம் வந்து சேரும் என்று சொல்வார்கள். இதனால் வம்சத்தில் பாதிப்பு, குழந்தையின்மை, மனநோய் போன்ற கடுமையான பிரச்னைகளை நம் சந்திக்க நேரிடும். இந்த தோஷத்தை முழுமையாக போக்க முடியாது. சர்ப்பசாந்தி, அரசமரத்தடி நாகர் வழிபாடு, புற்று வழிபாடு போன்ற பூஜைகளின் மூலம் அதன் வீரியத்தை குறைத்துக் கொள்ளலாம். இது அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுப்பட்டு இருக்கும். அதன் வீரியத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் பரிகாரம் செய்து பலன் அடைவது மிகவும் நல்லது.

Tags:    

Similar News