கோவில் தரிசனத்துக்கு ஈரத்துணி உடுப்பதனால் என்ன பயன் ??
ஈரத்துணி உடுத்தால் அது வயிற்றுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் கூறுவதுண்டு.குளித்து ஈர துணி உடுத்து கோயில் தரிசனம் செய்யும்போது பூரண பரிசுத்தம் மட்டுமே அதில் இருந்து எதிர்பார்க்கின்றோம் என்று கருதி வருகின்றோம்.
நம் நாட்டின் பல கோயில்களும் குளத்திலோ, நதியிலோ குளித்து கோயில் வளம் வருவது ஒரு கலை காட்சி. இவ்வாறு செய்வதனால் வயிற்றுக்குத் தீங்கு என்ற நம்பிக்கை பலர் கொண்டுள்ளனர்.
ஆனால் ஈர துணி உடுப்பதனால் தீமை அல்ல நன்மையை உண்டாக்குகிறது. நம் உண்ணும் உணவு மற்றும் குடிக்கும் நீரிலிருந்து ஏராளம் நோய் அணுக்கள் மற்றும் விஷ பொருட்கள் உட் செல்கின்றன என்று பழைய காலத்தில் இருந்தே நாம் அறிந்துள்ளோம்.
இவ்வகையில் விஷப் பொருட்களால் உணவு ஜீரணம் பாதிக்கப்படுகின்றது. சரியான ஜீரணம் நடக்காமல் இருப்பதால் மலம் சரியாக கலியவில்லையானால் வயிற்றுக்குள் வெப்பம் ஏற்படும்.
இதனால் பல நோய்கள் வரலாம், ஈரத்துணி உடுத்து கோயில் தரிசனம் செய்வதன் காரணம் வயிற்றின் வெப்பத்தை குறைப்பதற்காகவே இதை இன்றைய நவீன மருத்துவ துறையை ஒரு சிகிச்சையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.