உரக்க 'சரணம்' சொல்லி மலை ஏறுவது ஏன்?
சபரி மலைக்குப் போவதனால் விரதங்கள் ஆசரித்து போவதே பயனளிக்கும். முதியோர்கள் இதை பின் தலை முறைகளுக்கு இடைவிடாமல் போதித்து வருகின்றனர்.
எதிர் பார்க்கும் நன்மைகள் கை கூடுவ- தற்கு கண்டிப்பாக விரதம் கடைபிடித்து மலை ஏற வேண்டும் என்ற ஐயப்ப பக்தர்கள் விசுவாசிக்கி- ன்றனர்.
விரதம் கடைபிடித்தல் பக்தர்களுக்கு அளிக்கும் ஆத்தும திருப்தி வாழ்க்கையை முற்றிலும் சமர்ப்பிக்குமளவுக்கு அவர்களை ஆட்கொள்ளும் என்று கண்டறிந்துள்ளனர். உரக்க சரணம் சொல்லும் போது உடல் வேதனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
மாமிச வகைகள் தவிர்த்த தாவர உணவு முறை மனித உடலின் உள்ளுறுப்புக்களின் ஒரு புனர்சிருஷ்டி நடத்துகின்றது என கூறலாம் .
அனாவசியமாக உடலில் சேர்ந்து வரும் கொழுப்பு கரைந்து போய், மலை ஏறும் உடற்பயிற்சி ஊக்க மூட்டுகின்றது.
உரக்க சரணம் சொல்லும் போது காட்டி லுள்ள கொடிய விலங்குகள் பயந்து விலகும். மேலும் ஒரே சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறுவதனால் உண்டாகும் ஒரு சிறப்பான மன நிலையில் மிகக் கடினமான விஷயமான மலை ஏறுதலை சுலபமாகச் செய்ய இயலும் என்று அறிவியல் அங்கீகரிக்கிறது. இதுவே விரதம் பூண்டு சரணம் உரைக்கும் அசரத்தின் பயன்கள்.