இனி பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் - அரசாணை வெளியீடு!!
பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-09-18 14:20 GMT
Tn govt
பனை மரத்தை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைக்கு பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம். தவிர்க்க இயலாத சூழலில் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் கலெக்டர் அனுமதி பெறுவது கட்டாயம். பனை மரங்களை வெட்ட 'உழவர் செயலி'யில் விண்ணப்பிக்க வேண்டும். வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அனுமதி கடிதம் காட்டாயம். நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்களை பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.