நடிகை ராதிகா சரத்குமார் தாய் கீதா காலமானார்!!
எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா காலமானார். அவருக்கு வயது 86.;
stalin
கீதா ராதா கடந்த பல ஆண்டுகளாக குடும்ப வாழ்க்கையிலும், சமூக சேவையிலும் கவனித்தும் பங்களித்தும் வந்தவர்.அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை, எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போய்ஸ் கார்டன், சென்னை – 86 இல் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று 22 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல், பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனா். நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவி கீதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுடைய மனைவி திருமிகு. கீதா ராதா அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி திருமிகு.ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.