விஜய் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை!!
நடிகர் விஜய் தலைமையிலான "தமிழக வெற்றி கழகம்" (தவெக) கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-10-17 09:37 GMT
vijay
நடிகர் விஜய் தலைமையிலான "தமிழக வெற்றி கழகம்" (தவெக) கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றாலும், அங்கீகாரம் பெறவில்லை என்பது நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விஜய்யின் தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியை எப்படி ரத்து செய்ய முடியும் என ECI தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கில் TN அரசு, DGP பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.