புதுக்கோட்டையில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

புதுக்கோட்டை பேராங்குளம் அருகே ரெப்கோ வங்கியின் மாவட்ட தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 07 ஆம் தேதி நடைபெற உள்ளது.;

Update: 2025-12-04 12:18 GMT

ரெப்கோ வங்கியின் புதுக்கோட்டை மாவட்டம் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 07 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பேராங்குளம் அருகே உள்ள M.K.R.திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இதில் ரெப்கோ வங்கி சேர்மன் இ.சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சேர்மன் சி.தங்கராஜு ஆகியோர் வருகை தந்து தாயகம் திரும்பியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர். மேலும் இதில், தாயகம் திரும்பிய விதவை மகளிருக்கான விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல், தாயகம் திரும்பியவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல், தாயகம் திரும்பியவர்களுக்கு மருத்துவ உதவித் தொகை வழங்குதல், மகப்பேறு உதவித் தொகை வழங்குதல், ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்குதல், 10, 11, 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், தாயகம் திரும்பியவர்களுக்கு ரெப்கோ வங்கி இலவசமாக வழங்கும் 1,00,000 ரூபாய்க்கான காப்பீட்டு பத்திர பதிவுக்கான விவரப் புத்தகம் வைக்கப்படும் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளனர். இதில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News