ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன கிளை… புதிய பொலிவுடன் பாலக்காட்டில் துவக்கம்!!
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தங்களது பாலக்காடு கிளையை புதிய பொலிவுடன் நாளை துவங்குகிறது.;
By : King 24x7 Desk
Update: 2025-09-11 07:52 GMT
REPCO
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் தங்களது பாலக்காடு கிளையை புதிய பொலிவுடன் நாளை (செப்.12) துவங்குகிறது. ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மண்டல மேம்பாட்டு மேலாளர் கே.சி.ஷிஜு முன்னிலையில் நடைபெற உள்ள இந்த புதிய கிளை திறக்கும் நிகழ்ச்சியில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் ரெப்கோ வங்கி இயக்குநருமான சி.தங்கராஜு கலந்துக்கொண்டு புதிய கிளையை தொடங்கி வைக்கிறார். மேலும் இதில் உதவி பொது மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் கே.சிபி, கிளை மேலாளர் எம்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொள்கின்றனர்.