தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என EVKS இளங்கோவன்
EVKS இளங்கோவன்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-20 15:50 GMT
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான EVKS இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நடத்தப்படும் கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. யாருக்கும் அழைப்பு இல்லாமல் மர்மமான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. என்ன நடந்தது என்று தெரியாது என்றார்.