1250 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு!
வேலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சுவது தடுக்க மாவட்ட எஸ்பி மணிவண்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
Update: 2024-03-21 04:42 GMT
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் நேற்று (20.03.2024) சோதனை நடத்தினர். சோதனையில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 69 மது பாட்டில்கள், 267 லிட்டர் கள்ள சாராயம் , 200 கிராம் கஞ்சா, 455 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.1250 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக 12 மதுவிலக்கு வழக்குகள், இரு குட்கா வழக்குகள், ஒரு கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.