21 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-17 10:46 GMT

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதுகுறித்து கிடைத்த தகவல்:

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 484 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 ( IND TN 10 MM 35 (12 மீனவர்கள்) (IND TN 10 MM 302 - 9 மீனவர்கள் ) விசைப்படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் :

IND TN 10 MM 35 உரிமையாளர் ஆரோக்கிய சுகந்தன் 35 S/ o சேந்தி விக்டோரியா நகர் தங்கச்சிமடம் மீனவர்கள் விவரம்: 1.ஆரோக்கிய சுகந்தன் 38 S/ o சேந்தி ராயப்பன் விக்டோரியா நகர் தங்கச்சிமடம் 2. அருள்டிப்சன் 18 S/O ஜான் பீட்டர் விக்டோரியா நகர் தங்கச்சிமடம் 3.சாமுவேல் (19) S/o ஆரோக்கியம் விக்டோரியா நகர் தங்கச்சிமடம் 4.அந்தோணி 5.சுப்பிரமணி 69 S/o பொன்னுச்சாமி MRT நகர் RMM 6.பூமிநாதன் 7.ராஜ் 8. சுந்த

ரபாண்டி ( 48 ) S/o சந்தானம் MRT நகர் RMM 9. சீனிப்பாண்டி 10. பாலுச்சாமி 54 S/o அங்குச்சாமி MRT நகர் RMM 11.ராயப்பு லியோனார்ட் 32 S/O மனுவேல் துறைமுக வீதி இராமேஸ்வரம் 12.சக்திவேல் IND TN 10 MM 302 உரிமையாளர் இஸ்ரேல் S/O சிந்து வேர்க்கோடு ராமேஸ்வரம் பிடிபட்ட மீனவர்கள் 1.அந்தோணி லோபர்ஸ் 34 S/o யோகராஜ் TCM 2. அடிமை 3. குருஸ் திவாகர் S/O கஷ்மீர் TCM 4.யோசுவா 5.அஜித்குமார் 6.பிரவீன் 7.ரெஜிஸ் (29) S/o செல்வம் TCM 8.செந்தில் (44) S/o இருளாண்டி அகஸ்தியர் கூட்டம் 9.இருளாண்டி (40) S/O ராமதாஸ் அகஸ்தியர் கூட்டம்.



Tags:    

Similar News