கடலாடியில் மருது பாண்டியர்கள் 222-வது குருபூஜை விழா

கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மாமன்னன் மருது பாண்டியர்கள் 222-வது குருபூஜை விழா நடைபெற்றது.;

Update: 2023-10-24 15:39 GMT

மருது பாண்டியர்கள் 222-வது குருபூஜை விழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் அகமுடையார் சங்கம் சார்பில் மாமன்னன் மருதுபாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இவ்விழா கடலாடி அகமுடையார் சங்கம் சார்பில் பழனி தலைமை தாங்கினார்.முருகன் அனைவரையும் வரவேற்றார் பாண்டியன், ஏழுமலை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக அகமுடையார் சங்க மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தனஜெயன் மற்றும் அகம் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் கோமளவள்ளி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இமயவர்மன் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாமன்னன் மருதுபாண்டியர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வீர கோஷமிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Tags:    

Similar News