3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.;

Update: 2025-09-05 13:29 GMT
highcourt


3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கிறார்கள் தாய்மார்கள். மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், விடுப்பு தர மறுப்பது நியாயமற்றது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற இளநிலை உதவியாளர் ரஞ்சிதா, மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்து இருந்தார். விண்ணப்பத்தை நிராகரித்த முன்சீப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரஞ்சிதா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், 3வது முறையாக கருவுற்ற மனுதாரர் ரஞ்சிதாவுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Similar News