35கைப்பந்து குழுவினருக்கு ரூ.3லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

35 கைப்பந்து குழுவினருக்கு ரூ.3 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் தலைவர் ராஜ்குமார் வழங்கினார்

Update: 2023-11-25 04:56 GMT

உபகரணங்கள் வழங்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில், மாவட்டத்தில் உள்ள 35 கைப்பந்து குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று அழகாபுரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கைப்பந்து கழக செயலாளர்சண்முகவேல் தலைமை தாங்கினார்.

ஆலோசகர் விஜயராஜ், துணை தலைவர்கள் ராஜாராம், அகிலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு கைப்பந்து குழுவினருக்கு ரூ.3 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இந்த விழாவில் துணைத்தலைவர்கள் தனசீலன், ராஜேந்திரன், பொருளாளர் விஜயகுமார், இணை செயலாளர் சீனிவாசன், நிர்வாகி நந்தன் மற்றும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News