சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு கல்லூரியில் முப்பெரும் விழா
சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு கல்லூரியில் முப்பெரும் விழா;
Update: 2024-03-09 05:34 GMT
முப்பெரும் விழா
சத்தி அரசு கல்லூரியில் முப்பெரும் விழா சத்தியமங்கலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, கவின் மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கரூர் அரசு கலை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ச செ.அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் துறை வாரியாக முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டுபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார். இதையொட்டி கல்லூரி ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரியின் நிதியாளர் ஈஸ்வரன் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.