நடிகர் கார்த்தி உணவகம் 500-வது நாள்

நடிகர் கார்த்தி உணவகம் 500-வது நாள் தொடங்கப்பட்டது.

Update: 2024-02-17 16:55 GMT

உணவகம் திறப்பு

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான ‘பிரிஞ்சி’ (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது சாலை பராமரிப்பு பணிகள் காரணமாக போதிய இடவசதி இன்மையால் சில மாதங்களாக செயல்பட முடியாமல் இருந்து வந்த உணவகம் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

சனிக்கிழமை (17.04.2024)அன்று இந்த உணவகம் தொடங்கி 500-வது நாள் நிறைவடைகிறது.! ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.

Tags:    

Similar News