பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் - தவெக
தவெக தலைவர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-21 16:52 GMT
தவெக அறிக்கை
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
எனவே தலைவர் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.