வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி !!

Update: 2024-05-27 08:24 GMT

வைகோ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குமரி மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நெல்லை சென்றுள்ளார்.

இந்நிலையில் நெல்லையில் உள்ள பெருமாள்புரத்தில் அவருடைய சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் அவர் தங்கியுள்ளார். இரவு எதிர்பாராத விதமாக வைகோ கால் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் தங்கி இருந்த அவர் இன்று பிற்பகல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்கின்றார்கள். இன்று மாலை அல்லது நாளை வைகோவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News