எலும்பு முறிவால் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.
எலும்பு முறிவினை சரி செய்வதற்கு வைகோவிற்கு இன்று மாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர்.
மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் திமணவிழாவில் பங்கேற்பதற்காக வைகோ நேற்று முன்தினம் திருநெல்வேலியில் அவருடைய நண்பர் வீட்டில் எதிர்பாரா விதமாக வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வலி அதிகமாக இருந்தன் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதில் எலும்பு முறிவு சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தின்படி நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அதன் தொடர்ச்சியாக அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று முழுவதும் ஓய்வெடுத்தார் அந்த எலும்பு முறிவினை சரி செய்வதற்காக சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மதிமுக தலைவர் வைகோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அந்த எலும்பு முறிவினை சரி செய்வதற்கு தோள்பட்டையில் இன்று மாலை வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர் மேலும் மருத்துவமனைக்கு மதிமுக நிர்வாகிகள் யாரும் நேரில் வர வேண்டாம் எனவும் மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...