அண்ணாமலை நடைபயணம்: பேராவூரணியில் மாநில துணைத் தலைவர் ஆய்வு
அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள நிலையில் பேராவூரணியில் மாநில துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தஞ்சை மாவட்டத்தில் 'என் மண் என் மக்கள்' நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை பேராவூரணியில் மாலை 3 மணிக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். பேராவூரணி நீதிமன்றம் தொடங்கி நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் வரை நடைபயணம் மேற்கொள்ளும் அவர், பின்னர் அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
இதையொட்டி, பேராவூரணியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன் இன்று திங்கட்கிழமை காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைப் பயணம் தொடங்க உள்ள இடம், நடைப் பயணம் செல்ல உள்ள பாதை, பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அவரிடம், அகில இந்திய தென்னை வாரிய உறுப்பினரும், விவசாயிகள் அணி மாநில துணைத்தலைவருமான பண்ணவயல் இளங்கோ செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார். அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் வீரா, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, மாநில பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் பி. பெரியநாயகி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வி.சதீஷ், ஒன்றியத் தலைவர் அய்யா.வீரப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.