அரவிந்த் கெஜ்ரிவால் கைது அராஜகத்தின் உச்சகட்டம்: மன்சூர் அலிகான் பேட்டி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது, அராஜகத்தின் உச்சகட்டம் என நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.

Update: 2024-03-23 07:14 GMT

மன்சூர் அலிகான்

வேலூரில் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,"அமைச்சர் துரைமுருகன் பெரியவர். அவரெல்லாம் அழக்கூடாது. சிரிக்க வைப்பதற்காக பிறந்தவர். தமிழ்நாடு சட்டசபையில் அனைவரையும் சிரிக்க வைப்பவர் துரைமுருகன். டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து தன்னுடைய மகனை கைது செய்துவிடுவார்களோ? என்ற அச்சத்தில் இருக்கிறார். அதற்கு கவலைப்பட தேவையில்லை. இந்தியா என்பது மிகப்பெரிய ஜனநாயக நாடு. அது இன்றைக்கு சின்னாபின்னமாக மாற்றப்படுகிறது. ராணுவ ஹெலிகாப்டரில் மோடி வருகிறார்.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அரசு டிஸ்மிஸ் ஆனது. அது உண்மையான ஜனநாயகமாக இருந்தது. அதேபோன்று இந்த ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். முற்றிலும் இது ஒரு நாடகத் தேர்தல் என்பதுதான் அர்த்தம். டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அராஜகத்தின் உச்சகட்டம். இது கண்டிக்கத்தக்கது. கேப்டன் விஜயகாந்துடன் தே.மு.தி.க. போய்விட்டது. அதைப்பற்றி பேசவேண்டாம்.

நடிகர் விஜய் என்னுடன் தான் முதல் படம் நடித்தார். பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அவருடன் நான் நடித்துள்ளேன். நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார். வந்த பின் உங்களை நன்றாக, சரியாக வழி நடத்துவார். ஆறு லட்சம் ஓட்டுகள் பெறுவேன். இதை சவாலாக நினைத்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News