மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி!
100% வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.;
Update: 2024-03-22 17:37 GMT
வாகன பேரணி
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. அந்த பேரணியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பல உடனிருந்தனர்.