வாழை இலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி காய்கறி சந்தையில் சுப முகூர்த்த தினம் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதை முன்னிட்டு வாழை இலை விலை உயர்ந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-05-07 07:03 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை விவசாயம் முக்கிய விவசாயமாகும் இங்கு சுமார் 30000 ஏக்கருக்கு மேல் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது.தற்போது தூத்துக்குடி காமராஜர் காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக வாழை இலைகள் திருச்செந்தூர் கோரம்பள்ளம் ஆத்தூர் முக்கானி சாலை உள்ளிட்ட பகுதியில் இருந்து அதிகளவு வரத் துவங்கி உள்ளது. மேலும் சென்னை திருப்பூர் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

   இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் நடப்பதாலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் அசன பண்டிகை திருவிழா நடப்பதனாலும், சுபமுகூர்த்த தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.   வழக்கமாக 1500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் கதலி தார் வாழை இலை கட்டு தற்போது 2500 ரூபாய் இல் இருந்து 3500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது அதே போன்று நாட்டு தார் வாழை இலை கட்டு ஒன்று 1500 முதல் 2500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதன் காரணமாக வாழை இலை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News