திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.!
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-26 06:19 GMT
கிரிவலப்பாதை
திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடைகிறது.இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாளை மறுநாள் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.மேலும் 2 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.