பாஜக கூட்டணி இழுபறி - குலதெய்வ கோவிலில் ஓபிஎஸ் வழிபாடு
பாஜவுடனான கூட்டணி பேச்சு வார்த்தை இழுபறியாக உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வதற்காக தயாராகி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும் அதிமுக தலைமையிலான கூட்டணியும் ஏற்கனவே இறுதியான நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் தமிழகத்தில் தற்போது வரை தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களை ஒதுக்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி. தினகரன் ஆகியருக்கான கூட்டணி ஒதுக்கீடு தற்போது வரையில் முடியாமலேயே உள்ளது. இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக உள்ளதால் தனது குலதெய்வமான ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்.