போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜக மேற்கு மண்டலத் தலைவர் கைது.
போலி ஆவணம் தயாரித்த வழக்கில் வில்லிவாக்கம் பாஜக மேற்கு மண்டல தலைவர் மருதுபாண்டியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-06-14 03:01 GMT
பைல் படம்
தேர்தலுக்கு முன்பு திருமங்கலத்தைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணிடம் வீடு வாடகைக்கு எடுத்து, அதனை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்காமல் போலி ஆவணங்கள் தயாரித்து பாஜக பணிமனை அமைத்த விவகாரத்தில் திருமங்கலம் போலீசார் ஏற்கனவே பாஜக மேற்கு மண்டலத் தலைவர் மருது பாண்டி மற்றும் பாஜக பிரமுகர் மீனா ஆகியோர் மீது மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், பாஜக மேற்கு மண்டலத் தலைவர் மருது பாண்டியை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.