ஆவடியில் கோடை மழை
சென்னை ஆவடியில் கோடை காலத்தில் திடீரென பெய்த மழையால் சாலை முழுவதும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 16:22 GMT
கழிவு நீர்
சென்னை ஆவடியில் கோடை காலத்தில் திடீரென பெய்த மழையால் சாலை முழுவதும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். துர்நாற்றம் கலந்த கழிவுநீர் மழைநீருடன் சாலையில் கலந்து செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இது போன்ற சூழ்நிலை ஏற்படுவதாகவும் நிரந்தரமான கழிவுகள் இணைப்பு இதுவரை ஆவடி மாநகராட்சி சுற்றிலும் கொடுக்கப்படாததால் ஒவ்வொரு மழைக்கும் தொற்று நோய் பரவும் அபாயத்தில் ஆவடி பகுதி மக்கள் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.