எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார் - ஈபிஎஸ் கதறல் !

Update: 2024-06-26 07:30 GMT

ஈபிஎஸ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சட்டப்பேரவைக்கு தொடர்ந்து கறுப்புச் சட்டையில் வந்த அதிமுகவினர், இன்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்துக்கு பின் பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். பேரவை விதிகளின்படி சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- '' கள்ளச்சாராய விவகாரத்தில்  உண்மை வெளி வர வேண்டும் என்பதால் கவர்னரிடம் மனு அளித்தோம். சபாநாயகரை மதிக்கிறோம்.. அவையில் அரசியல் பேசுகிறார் சபாநாயகர்.  சட்டசபையில் பேச பேச தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டசபையில் பேச அனுமதி கோரி 5 நாட்களாக அ.தி.மு.க. போராடி வருகிறது. அ.தி.மு.க. உறுப்பினர் பேச அனுமதி மறுப்பது ஏன்? சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நீதிதான். வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து  பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்.'' இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

Similar News