மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

Update: 2024-06-11 06:33 GMT

மு.க.ஸ்டாலின் 

மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை துவங்கியது.

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags:    

Similar News