ஜெகத்ரட்சகனை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம்!
அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Update: 2024-04-03 06:11 GMT
வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கைத்தறி மற்றும் துணிகள் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,"அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார். மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தையும் ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.