தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கான ஆட்சியரின் எச்சரிக்கை
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நடத்தும் அலுவலருமான சுப்புலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில்,"வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1303 வாக்குச்சாவடிகள் மற்றும் 4 துணை வாக்குச்சாவடிகள் என 1307 வாக்குச்சாவடிகல் உள்ளன.அவற்றில் 6272 நபர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 5 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடந்து வருகிறது.
அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.முதல் நாள் என்பதால் இன்று ஒரு சிலர் பயிற்சிக்கு தாமதமாக வந்தார்கள். வரும் நாட்களில் தாமதம் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மேலும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.மருத்துவம் உள்ளிட்ட உரிய காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும், என கூறினார்.